Tuesday 11 June 2013

பிள்ளைகளில் நல்ல வாசிப்புப் பழக்கத்தை ஏற்ப்படுத்துவது எவ்வாறு?

வாசிப்புப் பழக்கம் என்பது பிள்ளைகளிற்கு சிறு வயதிலிருந்தேஊட்டப்பட வேண்டும்.


என் பராமரிப்புக்காக வரும் அதிகமான பிள்ளைகள் புத்தக வாசிப்பைப் பெரிதும் விரும்புவது இல்லை.  புத்தகம் ஒன்றுடன் அமைதியாக அமருவது அவர்களுக்கு விருப்பமான காரியம் இல்லை.  அவர்களுடைய பெற்றோர் கூட, “என் பிள்ளை மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறது.  ஒர் இடத்தில் சிறுது கூட இருக்க விருப்பம் இல்லை” என்று பெருமையாகக் கூறுவதைக் கேட்டிருக்கின்றேன்.  பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பது நல்ல விடயம் தான்.  அனாலும் அதே நேரத்தில் பிள்ளைகள் ஒர் இடத்தில் இருந்து அமைதியாக வாசிக்கவும் பழகிக் கொள்ள வேண்டும்.  புத்தகங்களும் வாசிப்புப் பழக்கமும் வாழ்க்கையில் ஒரு முக்கிய பகுதியாகும்.  நல்ல வாசிப்புப் பழக்கமானது சிறு வயதிலேயே பிள்ளைகளிற்கு ஊட்டப்படுமானால் அது ஆயுள் முழுவதும் அவர்களைத் தொடர்ந்து வரும்.

பிள்ளைகளின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்தக் கூடிய ஒரு சூழலை அவர்களிற்குக் கொடுப்போமானால், புத்தகம் வாசுக்கும் படி அவர்களைக் கட்டாயப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் எமக்கு ஏற்ப்படாது. இதற்க்காகப் பிள்ளைகளிற்க்கு வீட்டிலேயே ஒரு சிறிய நூல் நிலையம் அமைத்துக் கொடுத்தல் மிகச் சிறந்த வழியாகும்.  வீட்டு நூல் நிலையம் அமைப்பதற்க்கான உதவிக்குறிப்புகள் கீழே:

1.  நூல் நிலையம் அமைக்கப் படும் இடம் போதிய வெளிச்சம் உள்ளதாக இருக்க வேண்டும்.
2.  கவனமாகத் தெரிவு செய்யப்பட்ட புத்தகங்கள் தட்டுக்களில் அடுக்கி வைக்கப்பட வேண்டும்.
3.  புத்தகங்கள் பிள்ளைகளிற்கு எட்டக்கூடிய உயரத்தில் வைக்கப்பட வேண்டும்.  பிள்ளைகள் பெரியவர்களின் உதவி இன்றி தாமாகவே தம்முடைய தேவைகளை நிறைவேற்றும் போது தன்னம்பிக்கையில் வளர்கின்றார்கள்.
4.  பிளைகள் இருந்து வாசிப்பதற்க்காக அவர்களின் உயடத்திற்குப் பொருத்தமான இருக்கைகள் வழங்கப்பட வேண்டும்.  அதற்காக மென்மையான    பஞ்சினால் அமைக்கப்பட்ட இருக்கைகள்கூடப் பயன்படுத்தலாம்.
5.  அவர்களின் நூல் நிலயத்தில் கற்ற்ல்கணிணி(learning computer) கூட வைத்திருக்கலாம்.

3 comments:

  1. நல்லதொரு பகிர்வு. நீங்க சொன்னவற்றில் எதுவுமே நான் செய்யலை. இருந்தாலும் என் பிள்ளைகள் சாண்டில்யன் தொடங்கி.., டாவின்சி வரை படிக்குறாங்க..,

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சகோதரி. ஆச்சரியம் எதுவும் இல்லை. உங்கள் பிள்ளைகள் தங்கள் அம்மாவிடமிருந்தே வாசிப்புப் பழக்கத்தைப் பெற்றிருக்கலாம். முன் மாதிரிகையை விட சிறந்த ஆசான் எதுவும் இல்லை. வாசிப்பு நாட்டம் இல்லாத பிள்ளைகளுக்கு என் உத்தி உதவினால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

      Delete